சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

  கலைமகள் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு அரிமா சங்கத் தலைவர் எம்.பரணிதரன் முன்னிலை வகித்தார்.

  காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல்ராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai