சுடச்சுட

  

  தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கி வரும் 107 சதவீத அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டுமென தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  இச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்தார்.

  ஆண்டு விழா மலரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்டுப் பேசினார். கடலூர்

  ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.செல்வராஜ் ஓய்வூதியர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார்.

  கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு கருவூலம் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் குறை தீர தனி ஆணையம் அமைக்க வேண்டும். விலைவாசி உயர்விற்கேற்ப பண்டிகை முன்பணத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர் இறக்கும் நிலையில் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை

  ரூ.1 லட்சமாக வழங்கிட வேண்டும். சலுகை விலையில் பஸ் பாஸ் வழங்க வேண்டும். சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

  ஓய்வூதிய இயக்குநர் எம்.வி.மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ஐயப்பன், நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ம.கலையரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  மாநில துணைத் தலைவர் ரா.ராதாகிருஷ்ணன் வரவேற்க, துணைத் தலைவர் த.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai