சுடச்சுட

    

    சிதம்பரத்தில் மார்கழி மாதம் வியதீபாதம் நாளை முன்னிட்டு வீதிவலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானை தரிசித்தால் பாவங்கள் நீங்கி, புண்ணியங்களையும், செல்வங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    இதனை முன்னிட்டு இந்த ஆண்டு விஜய வருட தனுர் வியதீபாதம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை திரளான பக்தர்கள் நான்கு வீதிகளும் வலம் வந்து, நடராஜர் கோயிலுக்குச் சென்று சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமானை திருப்பள்ளி எழுச்சி நேரத்தில் வழிபட்டனர்.

    தில்லை திருமுறைக் கழகத்தினர் மற்றும் பக்தர்கள் திருமுறைகளை பாடியவாறே வீதிவலம் வந்தனர். வீதிவலம் வந்த பக்தர்களுக்கு பால், தேநீர், பானகம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பலர் வழங்கினர்.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மழை பெய்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தபடியே வீதிவலம் வந்து நடராஜப்பெருமானை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai