சுடச்சுட

  

  கடலூர், சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் 50-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் 100 வேட்டி, 100 சேலைகள் மற்றும் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து, கடலூர் அரசு பொதுமருத்துவமனையில் கடலூர் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்.ரகுபதி தலைமையில் 50 பேர் ரத்த தானம் செய்தனர். பின்னர், மகப்பேறு மருத்துவமனையில் இனிப்பு வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சிகளில் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், ஏ.நெடுஞ்செழியன், ஆர்.ஞானச்சந்திரன், பி.ஆர்.ராமலிங்கம், கார்த்திகேயன், ஞானசேகர், பாலு, கே.நாமதேவ், ஆர்.ஜெயசூரியன், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சிதம்பரம்

  ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

  மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், கே.ரஜினிகாந்த், மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார் முன்னிலை வகித்தனர். மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றார்.

  முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ஜெயச்சந்திரன், எஸ்.புரட்சிமணி ஆகியோர் 150 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் ஹாட்பேக் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினர்.

  நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பி.கே.காந்தி, பாபு ஆர்.எஸ்.சந்திரசேகரன், மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன், நகர்மன்ற உறுப்பினர் முகமது ஜியாவுதீன், எஸ்.ஆபீத்உசேன், ஆட்டோ டி.குமார், மகளிரணி ராஜலட்சுமி, தில்லைசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவரணி என்.மணிகண்டன் நன்றி கூறினார்.

  முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோயில், சிறைமீட்ட விநாயகர் கோயில், மந்தகரை செல்லியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

  அரசு காமராஜர் மருத்துவமனையில் வாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த முத்துக்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் ரத்த தானம் செய்தனர். புறவழிச் சாலையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai