சுடச்சுட

  

  தொலைபேசி கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

  By சிதம்பரம்,  |   Published on : 29th December 2014 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட்டுமன்னார்கோவில் அருகே தொலைபேசி கோபுரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

  காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (27). மின்னியலில் பட்டயப் படிப்பு படித்துள்ள இவர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரெட்டியார் சாலையில் உள்ள தொலைபேசி கோபுரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

  தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த இளைஞரை கீழே இறங்குமாறு வலியுறுத்தினர்.

  ஆனால், அந்த இளைஞர் செய்தியாளர்கள் வந்தால்தான் கீழே இறங்குவேன் எனத் தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்த இளைஞர் கோபுரத்தின் கீழே பாதி தூரம் வந்து அமர்ந்து கொண்டு அப்துல்கலாம் போல நிறைய கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்புகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  தமிழர்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவிட்டு கீழே இறங்கினார். பின்னர், போலீஸôர் அவரை கைது செய்து தற்கொலை முயற்சி

  வழக்குப் பதிவு செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai