Enable Javscript for better performance
பல்கலை.மாணவர் நடித்த நாடகம்- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை.மாணவர் நடித்த நாடகம்

    By விருத்தாசலம்,  |   Published on : 29th December 2014 04:48 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறை மாணவர்கள் நடித்த ஆகாசத்தின் உத்தரவு எனும் நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.

    எழுத்தாளர் இமையம் எழுதிய ஆகாசத்தின் உத்தரவு எனும் கதையை, புதுச்சேரி பல்கலைக்கழக நாடாகத் துறை பேராசிரியர் ராஜு நாடகமாக வடிமைத்துள்ளார்.

    இந்நிலையில், விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ்மிஷன் பள்ளியில் சனிக்கிழமை இந்த நாடகம் நடைபெற்றது.

    குல தெய்வத்திடம் குறி கேட்பதை மையமாகக் கொண்டு எழுதி இயக்கப்பட்ட இந்த நாடகத்தில் நாடகத் துறை மாணவர் இளம்பரிதி நடித்தார்.

    நிகழ்ச்சியில், எழுத்தாளர் இமையம், கவிஞர் கரிகாலன், நாடக இயக்குநர் பேராசிரியர் ராஜு, நாடக இசையமைப்பாளர் முருகவேல், அரங்க வடிவமைப்பாளர் பினுகுமார், சந்தோஷ், மனிஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai