சுடச்சுட

  

  மணல் குவாரிக்கு எதிராக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

  By விருத்தாசலம்,  |   Published on : 29th December 2014 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  விருத்தாசலத்தை அடுத்த பரவளூர் கிராமம் வழியாகச் செல்லும் மணிமுக்தாற்றில் மணல் குவாரி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து குவாரி தாற்காலிகமாக மூடப்பட்டது.

  இந்நிலையில், ஆற்றில் மணல் எடுப்பதால் ஏற்படும் தீமைகளை கிராம மக்களிடம் விளக்கும் வகையில் மணிமுக்தாற்றை சுற்றியுள்ள பரவளூர், ராமதாஸ் நகர், களரங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  இதில், மணிமுக்தாற்று மணல் குவாரி எதிர்ப்பு போராட்டக் குழுவினர் உள்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai