சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

  ரயில்வே துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடைநிலை ஊழியர்களுக்கு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ரயிலை இயக்குவது குறித்தும், பேனல் அறையிலிருந்து சிக்னல்களை இயக்குவது, இருப்புப்பாதை மாற்றுக் கருவியில் பழுது ஏற்பட்டால் அவற்றை சரிசெய்வது மற்றும் கேட் பழுதானால் அவற்றை சீரமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

  ஈச்சங்காடு ரயில் நிலைய மேலாளரும், பயிற்சிப் பள்ளி பயிற்றுனருமான (பொறுப்பு) ஜெகதீசன் பயிற்சி அளித்தார். 50 ஊழியர்கள் பயிற்சி பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai