சுடச்சுட

  

  "10 ஆண்டுகள் ஆன பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வேண்டும்'

  By விருத்தாசலம்,  |   Published on : 29th December 2014 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப்படி 10 ஆண்டுகள் அங்கீகாரம் நிறைவு பெற்ற பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற நிதியுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க 16-வது பொதுக்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டச் செயலர் என்.பன்னீர்செல்வம் வரவேற்றார். சங்க மாநில பொதுச்செயலர் ஜெ.எல்.பாண்டியன் தலைமை வகித்தார்.

  மாநில செயல் தலைவர் எம்.கணேசன், மாநில துணைத் தலைவர் எஸ்.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொதுச்செயலர் பொ.தாயப்பன் அறிக்கை சமர்ப்பித்தார்.

  நிதியுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாக மானியத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு 10 சதவிகிதமாக வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் நிறைவு பெற்ற பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.

  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படியும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படியும் வகுப்புக்கு 1 ஆசிரியரை நியமிக்க வேண்டும். அரசின் அறிவிப்புகளை ஆணை எனக் கருதி அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகத்தை முடக்க நினைக்கும் செயலை கைவிட வேண்டும்.

  தூய்மை இந்தியா திட்டத்தின்படி நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் துப்புரவுப் பணியிடங்களில் ஆள்களை நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். உதவிபெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவுப் பணியாளர் பணியிடங்களை முந்தைய அரசின் ஆணைப்படி, நிர்வாகம் பரிந்துரைக்கும் நபர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாநில பொருளர் டேவிட் அய்யாதுரை, நிர்வாகிகள் செந்தில்நாதன், கிருபானந்தன், சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai