சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை. மாணவர்களுக்கு கோயிலில் பாட வகுப்பு

  By சிதம்பரம்  |   Published on : 30th December 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்ணாமலைப் பல்கலை. தமிழியல் துறை மாணவர்களுக்கு கோயிலில் வைத்து குருக்கள் பாடம் நடத்தி புத்தகத்தை வழங்கினார்.

  அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 34 பேர் உள்ளனர். இவர்களுக்கு பக்தி இலக்கியம் என்ற பாடம் உள்ளது. இதை முன்வைத்து பேராசிரியர் பா.திருஞானசம்பந்தம் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி பெற்று அண்ணாமலை நகர் திருவேட்களம் பகுதியில் உள்ள ஸ்ரீபாசுபதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கோயிலின் அமைப்பும், தலவிருட்சம் போன்றவகளை விளக்கிக் கூறினார்.

  மேலும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், கோயில் குருக்களான கந்தசாமி குருக்கள் மாணவர்களுக்கு திருவேட்களம் தல வரலாறு குறித்தும், ஞானசம்பந்தர் தேவாரமும் பொருளும், நாவுக்கரசர் தேவாரமும், பொருளும், திருப்புகழும் நல்லநாயகி நான்மாலை போன்றவற்றை விளக்கி கோயில் வளாகத்திலேயே ஒரு மணி நேரம் பாடம் நடத்தினார்.

  பின்னர், மாணவர்களுக்கு திருவேட்களம் தல வரலாறும், பாடல்களும் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai