சுடச்சுட

  

  பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

  கடலூர் வட்டம், பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (34). இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி ரேகா (27), மகன் சதாநந்தா (1) ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார்.

  இவர்கள் பல்லவராயநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்த் திசையில் இருந்து வந்த டிப்பர் லாரி மோதியதில், ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை சதானந்தா மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  இதேபோன்று, பண்ருட்டி வட்டம், துண்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன். முத்தரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (26) இருவரும் முந்திரி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தனர்.

  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேல்முருகன் பைக்கில் ராதாகிருஷ்ணன் அமர்ந்து வந்துள்ளார். இவர்கள் பணிக்கன்குப்பம்-சாத்திப்பாட்டு சாலை அருகே வந்த போது அவ்வழியே வந்த டாரஸ் லாரி மோதியதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இவ்விரு விபத்துகள் குறித்தும் நெல்லிக்குப்பம் மற்றும் காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai