சுடச்சுட

  

  என்எல்சி நிறுவனம் இந்திய மக்கள் தொடர்பு சங்கத்திடம் இருந்து 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

  அகில இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (பி.ஆர்.எஸ்.ஐ.) 36-வது தேசிய கருத்தரங்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. வளர்ச்சின் தொடக்கம் - முன்னேற்றத்தில் அனைவருக்கும்

  பங்கு - மக்கள் தொடர்புத் துறையின் பங்களிப்பு என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

  கருத்தரங்கில் மக்கள் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

  இதில், சமூக பொறுப்புணர்வுமிக்க பொதுத் துறை நிறுவனங்களில் முதலிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்களில் முதலிடம் மற்றும் நியூஸ்லெட்டர் பிரிவில் இரண்டாமிடமும் என்எல்சி நிறுவனம் பெற்றது.

  என்எல்சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வுமிக்க பணிகளுக்காக 2013-2014ஆம் ஆண்டுக்கு ரூ.26.30 கோடி ஒதுக்கீடு செய்து, சமுதாய மற்றும் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மாற்றுக் குடியிருப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள், இழப்பீட்டுக்கான தொகைகள் மற்றும் வழக்குகளை விரைந்து முடித்தல், சுற்றுப்புற மக்களின் நலவாழ்வு, வளர்ச்சிக்கான பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.

  இந்நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி 2013-2014ஆம் ஆண்டில் 1,626 வினாக்கள் அடங்கிய 824 மனுக்கள் பெறப்பட்டு 285 மனுக்களுக்கு 1,432 வினாக்களுக்கு பதிலளித்துள்ளது.

  மேலும், என்எல்சியின் இ-நியூஸ், இ-நியூஸ் லெட்டர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

  தேசிய அளவில் வழங்கப்பட்டுள்ள இவ்விருதுகள் என்எல்சி நிறுவனத்துக்கு பெருமை சேர்ப்பதோடு மக்களுக்கு மேலும் சமூக பொறுப்புணர்வு மிக்க சேவை புரிய உதவிடும் என்று அதன் தலைவர் பி.சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai