சுடச்சுட

  

  கடலூரில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சியை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

  இந்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கடலூரில் கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது.

  கடலூர் ஓம்சக்தி திருமண நிலையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

  இதில், கடலூர் சரகத்திலுள்ள 60 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு கைத்தறி ஜவுளி ரகங்கள், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம், சிறுவந்தாடு அசல் பட்டு சேலைகள், கோவை காட்டன், பரமக்குடி காட்டன், மதுரை சுங்கடி, சின்னாளப்பட்டி, விளந்தை வெங்கடகிரி காட்டன் சேலைகள், ஈரோடு போர்வைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த துணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கைத்தறி என்றாலே அதிக விலை என்ற எண்ணம் இல்லாமல் கட்டுப்படியான விலையில் இப்பொருள்கள் கிடைக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஒரு பொருள் வாங்குவதன் மூலமாக நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

  கைத்தறி ஜவுளிகளுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி அளிக்கிறது. இக்கண்காட்சி ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.60 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

  கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் கி.கிரிதரன் உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai