Enable Javscript for better performance
காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில், கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் கிளை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் ஆர்.வெற்றிவேல் தலைமை வகித்தார். செயலர் ஆர்.வெங்கடேசன், கோட்ட இணைச் செயலர் டி.மணவாளன், முதல்நிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் எல்.வெங்கடேசன், முகவர்கள் சங்கம் சார்பில் தாண்டவமூர்த்தி, பிஎஸ்என்எல்இயு சார்பில் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

    சிதம்பரம்

    சிதம்பரம் ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் எஸ்.சுஜாதா தலைமை வகித்தார்.

    முதுநிலை அதிகாரிகள் சங்க பி.செல்வமுத்துக்குமரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆர்.தண்டபாணி, முகவர் சங்கம் வி.சம்பந்தமூர்த்தி, ஊழியர் சங்க வேலூர் கோட்ட இணைச் செயலாளர் சி.வெங்கடேசன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வி.சிதம்பரநாதன், சிஐடியூ நகர ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கச் செயலாளர் பி.யோகநாதன் நன்றி கூறினார்.

    பண்ருட்டி

    ஆயுள் காப்பீட்டுக்கழக பண்ருட்டி கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.

    செயலர் வைத்திலிங்கம் போராட்ட விளக்கவுரையாற்றினார். கிளை மேலாளர் முத்தையன், முகவர் சங்கச் செயலர் ரவி, மண்டல பொருளர் பழனி, வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், முதல்நிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் ராஜன்பாபு உள்ளிட்ட ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் பங்கேற்றனர்.

    விருத்தாசலம்

    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆயுள் காப்பீட்டுக் கழக விருத்தாசலம் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் கிளைச் செயலர் கே.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.

    காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்.சீனிவாசன், சி.மோகன், சி.செல்வராசு, வேலவன், வினோதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai