சுடச்சுட

  

  பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரயில்வே கேட்டில் கேட்கீப்பர் தூங்கியதால் ரயில் நிறுத்தப்பட்டது.

  அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று கேட்கீப்பரை எழுப்பினார்.

  பண்ருட்டி-கடலூர் ரயில் மார்க்கத்தில் திருவதிகையில் ரயில்வே கேட் உள்ளது. திங்கள்கிழமை காலை பயணிகள் ரயில் வந்தபோது, பணியில் இருந்த கேட்கீப்பர் சிவமூர்த்தி தூங்கிவிட்டதாகத் தெரிய வருகிறது.

  இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்பட்டது. அவ்வழியே பயணித்த கடலூர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கேட் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இறங்கிச் சென்று தூக்கிக் கொண்டிருந்த கேட் கீப்பரை எழுப்பிவிட்டதாகவும், பணி நேரத்தில் தூங்கிய கேட் கீப்பர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறையினர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

  கேட் மூடாததால் ரயில் 10 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai