சுடச்சுட

    

    பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பத்தில் தீக்குளித்த இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி புதுச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

    பண்ருட்டியை அடுத்த திருவதிகையைச் சேர்ந்த ஆனந்தன் (60) மகள் நந்தினி (24). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கந்தன்பாளையத்தைச் சேர்ந்த சரவணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சந்தியா (5), கோகுல் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், சரவணன் வரதட்சிணை கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நந்தினி கடந்த 22-ம் தீக்குளித்தார்.

    புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். பண்ருட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோன்று, நெல்லிக்குப்பம் நகரம், கோண்டூர் சிவராமன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவரது மகள் வித்யாவுக்கும் (26), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சனிக்கிழமை வித்யா தீக்குளித்தார். புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai