சுடச்சுட

    

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை

    By சிதம்பரம்,  |   Published on : 30th December 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அவதார் பிராணிகள் நல அமைப்பு சார்பில் சிகிச்சை மற்றும் உதவி அளிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம், சோழத்தரம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கோவிந்தநல்லூர் காலனியில் மாற்றுத் திறனாளி பெண் ஆர்.தங்கம் என்பவரின் மாட்டுக் கொட்டகை தீப்பற்றி கொட்டகையில் இருந்த 4 ஆடுகள் இறந்தன. 4 பசுக்கள், 2 கன்றுக் குட்டிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அவதார் பிராணிகள் நல அமைப்புத் தலைவர் சி.எஸ்.பாலசுந்தரம், செயலாளர் கே.சக்திவேல், நிர்வாகிகள் வி.ரகு, டி.ராமலிங்கம், எம்.வேலு, மருத்துவப் பிரிவுச் செயலாளர் கே.சதீஷ், ஆலோசகர் எஸ்.எழிலன், மருந்தக உரிமையாளர் ஜே.கண்ணன், கால்நடை மருத்துவர் எம்.கணேசன் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று தீக்காயம் அடைந்த பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும், மாட்டின் மீது காயம் ஆற ஸ்பிரே மருந்து அடிக்கப்பட்டது. 4 வகையான ஊசிகள் போடப்பட்டன. நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மருந்துகள், 5 நாள்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai