சுடச்சுட

  

  நெய்வேலி ஆர்ச் கேட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரிக்கை

  By பண்ருட்டி  |   Published on : 30th December 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயணிகளின் நலன் கருதி நெய்வேலி ஆர்ச் கேட் அருகே பேருந்து நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும் என நெய்வேலி நிலக்கரிச் சுரங்க தலைமை பொதுமேலாளர் (மனித வளம்) முத்துவிடம், வடக்குத்து ஊராட்சிமன்றத் தலைவர் கோ.ஜெகன் மனு அளித்தார்.

  அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வடக்குத்து ஊராட்சியில் உள்ள 42 நகர்கள், 8 கிராமங்களில் வசிக்கும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், நெய்வேலி நகரியத்தில் உள்ள 30 வட்டத்தில் வசிப்பவர்களும் சென்னை, கும்பகோணம் மார்க்கத்தில் செல்ல வேண்டுமானால் ஆர்ச் கேட் வந்துதான் செல்ல வேண்டும்.

  சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் ஆர்ச் கேட் எதிரே நின்று செல்கின்றன. இங்கு பேருந்து நிறுத்தம் இல்லாததால் வடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பயணிகள் சாலையில் நின்று பேருந்து ஏறும் நிலை நீடிக்கிறது.

  எனவே, சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் ஆர்ச் கேட் உள்ளே சென்று வெளியேறும் வகையில் ஆர்ச் கேட் மேற்குப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்று அமைத்துத் தரவேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai