சுடச்சுட

  

  புவனகிரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன்

  50-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

  விழாவை முன்னிட்டு புவனகிரி ஸ்ரீராகவேந்திரா கோயிலில் சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.ஜி.குமார் தலைமை வகித்தார். புவனகிரி பேரூராட்சி துணைத் தலைவர் என்.ராம்குமார் வரவேற்றார். முன்னாள் தலைவர் தனலட்சுமி கலைவாணன், வட்டாரத் தலைவர் எஸ்.சிவக்குமார், கைத்தறி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் கே.ஆர்.பன்னீர்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai