சுடச்சுட

  

  போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இதுகுறித்து கடலூர் மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மாவட்ட சிஐடியு ஆதரவளிக்கிறது.

  கடந்த 16 மாதங்களாக ஊதிய உயர்வு இல்லாமல் அவதிப்படும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தியும், துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தும், அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

  எனவே, அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். சட்டப்பூர்வமாகவும், அமைதியாகவும் போராடும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai