சுடச்சுட

  

  கடலூர் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இலவச மனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

  கூட்டத்தில், மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம், தாட்கோ மூலமாக ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைப்பதற்கு பழனியம்மாள் என்பவருக்கு ரூ.20 ஆயிரம், சரக்கு வாகனம் வாங்குவதற்கு செல்வக்குமார் என்பவருக்கு ரூ.3.89 லட்சம், டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு சேமநல நிதியாக ரூ.1.45 லட்சத்தை ஆட்சியர் வழங்கினார்.

  2013-2014ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய சிறுசேமிப்பு முகவர்கள் மற்றும் சம்பளப் பட்டியல் சேமிப்பு குழுத் தலைவர்கள் ஆட்சியரை சந்தித்தனர்.

  அதேபோன்று, உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நாடகம், நாட்டியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

  மேலும் சமூக நலத் துறையின் சார்பில், சுனாமியால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு வைப்பீடு ரசீதுகளின் காசோலையாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 405 வழங்கினார்.

  இந்திய அரசு நேரு இளையோர் மையம் மூலமாக இந்தியாவில் சிறந்த இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கடலூர் மாவட்ட இளையோர் மைய தன்னார்வ தொண்டர் ஆர்.சண்முகம் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், சமூக நலத்துறை அலுவலர் புவனேஷ்வரி, தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) நாகலெட்சுமி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai