சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை.  கடல் அறிவியல் புலத்துக்கு விருது

  By  சிதம்பரம்  |   Published on : 31st December 2014 12:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்அறிவியல் புல குழுவினரின் ஆய்வுக் கட்டுரைக்கு, சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருது இந்திய தொலையுணர்வு கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
   பல்கலை. கடல்அறிவியல் புல முனைவர் டி.தங்கராஜு மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, 2013-ம் ஆண்டின் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக இந்திய தொலையுணர்வு கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
   ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலை.யின் கடல்அறிவியல் புல முனைவர் டி.ரங்கராஜ், இந்திய புவியியல் அமைச்சக செயலாளர் சைலேஷ் நாயக் இடம் இருந்து விருதையும், ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையும் பெற்றுக்கொண்டார்.
   விருது பெற்ற முனைவர் டி.தங்கராஜு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா, பதிவாளர் ந.பஞ்சநதம் மற்றும் புல முதல்வர் பேராசிரியர் கே.கதிரேசன் ஆகியோரைச்
   சந்தித்து வாழ்த்து பெற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai