சுடச்சுட

  

  அரசுப் பேருந்து மீது கல்வீச்சு:  ஓட்டுநர் காயம்

  By  பண்ருட்டி  |   Published on : 31st December 2014 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லிக்குப்பம் அருகே அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. ஓட்டுநர் காயமடைந்தார்.
   கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பண்ருட்டியில் இருந்து கடலூருக்குச் சென்ற அரசுப் பேருந்து சித்தரசூர் அருகே மர்ம நபர்களால் கல்வீசித் தாக்கப்பட்டது. இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்ததோடு, ஓட்டுநரான அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் (45) காயமடைந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   விருத்தாசலம்
   விருத்தாசலத்தில் இருந்து பவழங்குடிக்கு அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டுநர் குமார் பவழங்குடியிலிருந்து, கருவேப்பிலங்குறிச்சி வழியாக விருத்தாசலத்துக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
   அப்போது, கருவேப்பிலங்குறிச்சி ஓடைப்பாலம் அருகே வரும்போது, மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
   இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai