சுடச்சுட

  

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அன்றைய தினம் கடலூர் மாவட்டத்துக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, ஜனவரி 5ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்களுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 14ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.
   ஜனவரி 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள், அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai