சுடச்சுட

    

    ஜனவரி
     1 சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி புதன்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     6 கடலூர் நகர்மன்றத் தலைவருக்கு எதிராக, கவுன்சிலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     10 கடலூர் நகர்மன்றக் கூட்டத்தில், தீர்மான நகலை கிழித்ததாக 4 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     15 சாயத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே 20 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொங்கல் கொண்டாடினர்.
     22 என்எல்சி நிறுவனத்தில் 21 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மண்வெட்டும் இயந்திரம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
     28 சிதம்பரம் நகராட்சியில் ரூ.1 கோடியே 22 லட்சம் கையாடல் வழக்கு தொடர்பாக சென்னையிலிருந்து வந்த சிபிசிஐடி போலீஸார் சிதம்பரத்தில் முகாமிட்டு நகராட்சி மற்றும் வங்கி ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
     
    பிப்ரவரி
     1 என்எல்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
     2 கடலூர் மாவட்டத்தில் 23 போலீஸ் எஸ்ஐகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
     5 கடலூர் மாவட்டத்தில் சொந்தத் தொகுதியில் பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
     7 கடலூர் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்கும் வகையில், கால்நடைகளுக்குத் தீவனமாக கிலோ வைக்கோல் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.
     19 நகர்மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, போலீஸார் குவிக்கப்பட்டதால் கடலூர் நகர்மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
     
    மார்ச்
     4 விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     6 கடலூர் மாவட்டத்தில் 2,154 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 10 சதவீத வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரியவந்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார்.
     14 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகள் 83 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     17 என்எல்சியில் ஒப்பந்த ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
     19 நடுக்கடலில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 மீனவர்கள் காயமடைந்தனர். இதனால் கடலூர் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
     29 நாடாளுமன்றத் தேர்தல் மனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
     31 கடலூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் முன்னிலையில் பாமகவினர் மோதிக்கொண்டதால், ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
     
    ஏப்ரல்

     2 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத் திறனாளிகள், மாடிப்படி ஏறிச்செல்ல முடியாததால் தர்னாவில் ஈடுபட்டனர்.
     3 என்எல்சி நிறுவனம் 1998 கோடியே 87 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது என்று என்எல்சி தலைவர் பி.சுரேந்தர்மோகன் தெரிவித்தார்.
     7 கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 3 சுயேச்சை மற்றும் அரசியல் கட்சி மாற்று வேட்பாளர்கள் 4 மனுக்கள் என மொத்தம் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
     16 திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, அங்குள்ள தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டினார்.
     25 கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 78.82 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்களில், 9 லட்சத்து 83 ஆயிரத்து 415 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
     
    மே

     9 பிளஸ்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களையும் மாணவிகளே பிடித்து சாதனை படைத்தனர்.
     16 சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவை, வருகிற
     2015}ம் ஆண்டு முதல் பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு செய்துள்ளனர்.
     16 கடலூர் தொகுதியில் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக சாதனை படைத்தது.
     20 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நீராவிக் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் முதன்மை மேலாளர் உயிரிழந்தார், 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
     
    ஜூன்

     4 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குப்பையில் கிடந்த வெடி பொருளை பன்றி கவ்வியபோது அது வெடித்துச் சிதறியது. இதில் வாய் கிழிந்து பன்றி உயிரிழந்தது.
     7 கடலூர் மாவட்ட ஆட்சியராக எஸ்.சுரேஷ்குமார் பொறுப்பேற்றார்.
     26 கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.120 கோடியை வழங்க வலியுறுத்தி, கடலூர் மாவட்ட தனியார் சர்க்கரை ஆலைகள் முன், காத்திருப்புப் போராட்டத்தை கரும்பு விவசாயிகள் தொடங்கினர்.
     30 பணிநிரந்தரம் செய்யக் கோரி, என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     
    ஜூலை
     6 104 அவசர மருத்துவ உதவி சேவைத் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.
     7 வாடகை உயர்வைக் கண்டித்து நெய்வேலி நகரில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
     
    ஆகஸ்டு
     6 மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் எச்சரித்தார்.
     6 திட்டக்குடியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டு மாணவிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலிடமிருந்து மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக பாதிரியார் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     29 கடலூர் மாவட்டத்தில் 198 வங்கிக் கிளைகளின் வாயிலாக ஜன் தன் திட்டம் (அனைவருக்கும் வங்கி சேவை திட்டம்) செயல்படுத்தப்படுகிறது என்று ஆட்சியர் சி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
     
    செப்டம்பர்
     3 கடலூர், விருத்தாசலம் நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கும் சிதம்பரம் நகராட்சியில் 2 வார்டுகள் உறுப்பினர் பதவி மற்றும் பண்ருட்டி வட்டம், திருத்துறையூரில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் அதிமுக வேட்பாளர்கள் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
     3 என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
     14 என்எல்சியில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கு என்எல்சி நிர்வாகம் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேலைநிறுத்தம் தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளது.
     30 சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு கண்டனம் தெரிவித்து, சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
     
    அக்டோபர்

     1 திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும், கடலூரில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     17 வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கொட்டும் மழையில் முற்றுகையிடச் சென்ற அனைத்துக் கட்சியினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
     
    நவம்பர்
     1 இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, கடலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
     4 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் பூட்டியிருந்த பீரோவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.15 லட்சம் தொகை குறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     14 என்.எல்.சி. நிர்வாகத்தால் ஏற்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
     28 கடலூர் நகராட்சிக் கூட்டத்தில் திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 திமுக கவுன்சிலர்கள் கூட்டத் தொடரிலிருந்து வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
     
    டிசம்பர்
     15 என்.எல்.சி. நிறுவனம் தனது சிறப்புமிக்க நடவடிக்கைகளால் ஆண்டுக்கு 4 கோடி யூனிட் மின்சக்தியை மிச்சப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இச்சேவையை பாராட்டி மத்திய மின்சக்தி அமைச்சகம் 2014-ம் ஆண்டுக்கான தேசிய சக்தி சேமிப்பு விருதை வழங்கியுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai