சுடச்சுட

  

  கரும்பு கொள்முதல் விலை குறைப்பு:  மதிமுக கண்டனம்

  By  கடலூர்,  |   Published on : 31st December 2014 01:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரும்பு கொள்முதல் விலை குறைக்கப்பட்டதற்கு கடலூர் மாவட்ட மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து, மதிமுக கடலூர் வடக்கு மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை:
   சர்க்கரைத் துறை ஆணையர் கடந்த ஆண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.490 கோடியை பெற்றுத் தரவில்லை.
   அதேநேரத்தில், நிகழாண்டுக்கான கரும்பு கொள்முதலுக்கான ஆதரவு விலையை தமிழக அரசு அறிவிக்காமல், தன்னிச்சையாக நிகழாண்டு கரும்பு அரவை பருவத்துக்கு (2014-2015) மத்திய அரசு அறிவித்த ரூ.2,200 மட்டும் அளித்தால் போதும் என்று கூட்டுறவுத் துறை ஆலைகளுக்கு ஆணையர் பரிந்துரை செய்துள்ளதை கண்டிக்கிறோம்.
   சர்க்கரைத் துறை ஆணையர் தன்னிச்சையாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று உடனடியாக முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலையை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிடில் விவசாயிகளைத் திரட்டி மதிமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai