சுடச்சுட

    

    கூட்டுறவு அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

    By  கடலூர்,  |   Published on : 31st December 2014 01:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கடலூரில் 3 நாள்கள் நடைபெற்றது.
     மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்-பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் 90 பேருக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூர் தலைமை கூட்டுறவு வங்கியில் திங்கள்கிழமை தொடங்கியது.
     பயிற்சி முகாமை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் தொடங்கி வைத்தார்.
     முதல் நாளில் எளியமுறை உடற்பயிற்சி, மனவளக் கலை, அமைப்பு எதிர்காலத் திட்டம் மற்றும் குறியீடு, அரசுப் பணியில் சார்நிலை அலுவலர்களின் குறியீடு, பொது விநியோகத் திட்டத்தில் விற்பனையாளர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, மின்னணு தராசு பராமரித்தல், கடன்கள் சீரமைப்புத் திட்டம், சிறப்புத் திட்டங்கள் கூட்டுப் பொறுப்பு, வேளாண் சேவை மையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சிறப்பு வல்லுநர்கள் பயிற்சியளித்தனர்.
     2-வது நாளான செவ்வாய்க்கிழமை சத்யானந்தா யோகா மையம் சார்பில் யோகா மற்றும் தியான வகுப்புகள் நடத்தப்பட்டன.
     தொடர்ந்து, வேளாண் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல், நுகர்வோர் தீர்ப்பாயம் மற்றும் கூட்டுறவுத் தீர்ப்பாயத்தின் சட்டப்பூர்வ பணிகள், கூட்டுறவுத் தேர்தல், பதிவேடுகளை பராமரித்தல், மேல்முறையீடுகள், தலைமைப் பண்புகள் மற்றும் பயிற்சி, ஒழுங்கு நடவடிக்கை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், வருங்கால வைப்பு நிதிச் சட்டம் மற்றும் பணிக் கொடைச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டம் குறித்து வல்லுநர்கள் பயிற்சியளித்தனர். புதன்கிழமை (டிச.31) தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம், புத்தாக்கப் பயிற்சி குறித்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai