சுடச்சுட

  

  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானதொழிற்சங்கத்தினரை விடுவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
   இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் எம்.சேகர் வெளியிட்ட அறிக்கையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்குச் சென்று, ஆய்வு என்ற பெயரில் தொழிலாளர்களை கைது செய்யச் சொல்வதும், தொழிற்சங்கத்தினரை அச்சுறுத்துவதும் கண்டனத்துக்குரியது.
   தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai