சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே  பேருந்து கண்ணாடி உடைப்பு: மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது

  By  சிதம்பரம்,  |   Published on : 31st December 2014 12:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற கும்பகோணம் மற்றும் விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 73 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   சேத்தியாத்தோப்பு அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
   ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச, சி.ஐ.டி.யு தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 11 சங்கங்களின் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க விடாமல் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
   சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன், செவ்வாய்க்கிழமை போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   பின்னர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது 35 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
   இதேபோன்று, மணலூர் லால்புரத்தில் உள்ள விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை சிதம்பரம் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.
   மேலும், சேத்தியாத்தோப்பு-பின்னலூர் இடையே செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
   விருத்தாசலம்
   விருத்தாசலத்தில் உள்ள இரண்டு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 135 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
   இரண்டு பணிமனைகளில் இருந்தும் சுமார் 40 பேருந்துகள் மட்டுமே வழித் தடங்களில் சென்று வருவதாகத் தெரிகிறது. பேருந்துகள் பெருமளவில் இயங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai