சுடச்சுட

  

  தனியார் நிதி நிறுவன  ஊழியர்கள் மீது தாக்குதல்:  10 பேர் மீது வழக்குப் பதிவு

  By  பண்ருட்டி  |   Published on : 31st December 2014 12:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடன் தொகை செலுத்தாததால் வாகனத்தை பறிமுதல் செய்யச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிய 10 பேர் மீது புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
   பண்ருட்டி அ.ப.சிவராமன் நகரை சேர்ந்தவர் விஜயகாந்த் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல்தாரராக பணியாற்றி வருகிறார்.
   இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடன் தொகை செலுத்தாத கட்டமுத்துப்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேலின் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ய சக ஊழியர்களுடன் சென்றுள்ளார்.
   அப்போது அங்கிருந்த சக்திவேல், அவரது சகோதரர் ஞானவேல் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில், நிதி நிறுவன ஊழியர்கள் விஜயகாந்த், சுப்பிரமணிய சிவா, நாராயணன் ஆகியோர் பலத்த காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
   இதுகுறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai