Enable Javscript for better performance
திட்டக்குடியில்  35 பேருக்கு மனைப் பட்டா- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி வட்டத்தில் 35 பேருக்கு செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
     திட்டக்குடி வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அரசின் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருபவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்திருந்தனர்.
     இந்நிலையில், இந்த மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டது.
     இதன்படி, திட்டக்குடி வட்டத்தில் நத்தம் புறம்போக்கு அனுபவத்தில் குடியிருக்கும் 35 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கும் முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமார் பங்கேற்று டி.ஏந்தல், கீழ்ச்செருவாய், கீழாதனூர், மேலாதனூர், நாவலூர், வையங்குடி, பனையாந்துர், வள்ளிமதுரம், செவ்வேரி, கொரக்கை கிராமங்களைச் சேர்ந்த 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.
     நிகழ்ச்சியில் திட்டக்குடி வட்டாட்சியர் தேவநாதன், மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai