சுடச்சுட

    

    நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பண்ருட்டி 12-வது வார்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     மாவட்டச் செயலர் (பண்ருட்டி) வெற்றிவேலன் தலைமையில், கடலூர் மண்டலச் செயலர் கடல்தீபன் முன்னிலையில், பண்ருட்டி நகரச் செயலர் பாட்சா, நகர இணைச் செயலர் வினோத்குமார், நகர துணைத் தலைவர் சக்திவேல், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் ராமதாசு, பண்ருட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மகாதேவன், பண்ருட்டி ஒன்றிய இணைச் செயலர் திருநாவுக்கரசு, நெல்லிக்குப்பம் நகர இளைஞர் பாசறைச் செயலர் கார்த்திகேயன் உள்பட பலர், 12-வது வார்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     விழாவில் நெல்லி, கொய்யா, பலா உள்ளிட்ட 200 மரக்கன்றுகளும், நம்மாழ்வார் சிந்தனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai