சுடச்சுட

    

    பெண்ணாடம் கோயிலில்  அறநிலையத் துறை அதிகாரி ஆய்வு

    By  கடலூர்,  |   Published on : 31st December 2014 01:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்ணாடத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரர் கோயிலில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
     கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் இந்து அறநிலைக்குச் சொந்தமான அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரளயகாலேஸ்வரர் கோயிலுக்குச் செந்தமான திருக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த ஆண்டு திருக்குளத்தை சுத்தம் செய்ய ரூ. 4.74 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது.
     ஆனாலும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் திருக்குளத்தை சுத்தம் செய்யமுடியவில்லை. எனவே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
     மேலும், கோயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சிலைகளை எடுத்து ஒழுங்குப்படுத்திட உத்தரவிட்டார்.
     ஆய்வின்போது உதவிக் கோட்டப் பொறியாளர் ரவி, செயல் அலுவலர் கொளஞ்சி மற்றும் கணக்காளர் மலையப்பன், ஊழியர்கள் இருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai