Enable Javscript for better performance
மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

    By  விருத்தாசலம்,  |   Published on : 31st December 2014 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் மின்துறை அலுவலகத்தில் மின்இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட பூதாமூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பெயர் மாற்ற சிறப்பு முகாமுக்கு செயற்பொறியாளர் நடேசன் தலைமை வகித்தார்.
     உதவி செயற்பொறியாளர்கள் சுகன்யா, சிவசங்கர், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாவட்ட கண்காணிப்பாளர் அருள்காந்தி, மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வந்திருந்த நுகர்வோரிடம் முகாம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
     முகாமில், பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்த நுகர்வோருக்கு உடனடியாக பெயர்மாற்றம் செய்து வழங்கப்பட்டது. இதில், உதவிக் கணக்கு அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai