சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த முத்தையன் மனைவி சரோஜினி (65). இவர், கடலூர் வள்ளலார் நகரில் வசித்து வரும் தனது மகள் லட்சுமி வீட்டுக்கு அண்மையில் வந்திருந்தார்.
   பின்னர், புதுவையில் உள்ள மற்றொரு மகள் வீட்டுக்குச் செல்வதற்காக கடலூர் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் புதுச்சேரிக்குச் செல்வதற்கு இலவசமாக பேருந்து பயணச்சீட்டு பெற்றுத் தருவதாகவும், அதற்கு கழுத்தில் நகை அணிந்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, சரோஜினி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அப்போது தான் கையில் வைத்திருந்த பேனாவை பிடிக்குமாறு அந்த நபர் கூறவும், சரோஜினி பேனாவை வாங்கிய நேரத்தில், சரோஜினி கையில் வைத்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு, அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பினார். இதில், கீழே விழுந்த சரோஜினி காயமடைந்ததோடு, நிலைமையை உணர்ந்து கூச்சலிட்டார். எனினும், அந்த நபர் தப்பி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் புதுநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai