சுடச்சுட

  

  வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

  By  கடலூர்/சிதம்பரம்,  |   Published on : 31st December 2014 01:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிஐடியு, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடலூர், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   கடலூர் உழவர்சந்தை முன் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
   அப்போது, போலீஸாருக்கும், சிஐடியுவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதி 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் எஸ்.ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
   வருவாய்த் துறை ஊழியர் சங்கம் சார்பில் எழிலன், உணவுப் பாதுகாப்புத் துறை ஊழியர் சங்கம் சார்பில் ரவிச்சந்திரன், தொழிலாளர் நலத் துறை ஊழியர் சங்கம் சார்பில் சாம்பசிவம், நிலஅளவைத் துறை ஊழியர் சங்கம் சார்பில் கல்யாணசுந்தரம், வணிகவரித் துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஜனார்த்தனம், அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க பொதுச்செயலர் எம்.மருதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   சிதம்பரம்
   போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தியும், சிதம்பரம் வட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கத்தினர் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   உதவிஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் எம்.மனோகர் தலைமை வகித்தார்.
   செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோவில் வட்டச் செயலாளர் சி.மச்சேந்திரன், நிர்வாகிகள் என்.கலியமூர்த்தி, கே.என்.பன்னீர்செல்வம், அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகி சி.வெங்கடேசன், டி.மகாலிங்கம் உள்பட சுமார் 50 பேர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai