சுடச்சுட

  

  வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் நடைபெற்று வருகின்றன.
   பண்ருட்டி காந்தி வீதியில் வரதராஜப் பெருமாள் கோயிலும், திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் மற்றும் ரங்கநாதப் பெருமாள் கோயில்கள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இம்மூன்று கோயில்களிலும் வியாழக்கிழமை (1.1.2015) காலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
   ஆங்கில புத்தாண்டு பிறப்பு மற்றும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ஒன்று சேர்ந்து வருவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில்கள் நிர்வாகம் செய்து வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai