சுடச்சுட

    

    3-வது நாளாக வேலைநிறுத்தம்:  122 தொழிலாளர்கள் கைது

    By  கடலூர்,  |   Published on : 31st December 2014 12:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதாக கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 122 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
     22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
     தவிர, பணிமனைகள் முன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.
     இந்நிலையில், கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி பணிமனைகள் முன் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி மற்றும் பாமக தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
     இதில், பங்கேற்ற 122 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     கடலூர் மாவட்டத்தில் 80-க்கும் குறைவான பேருந்துகளே செவ்வாய்க்கிழமை இயங்கின. அதே நேரத்தில், கடலூர்-புதுச்சேரிக்கு தடையின்றி தனியார் பேருந்துகள் இயங்கிவந்தன.
     மாவட்டத்தின் இதர பகுதிகளுக்குச் சென்றுவந்த பயணிகள் மிகுந்த சிரமத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் பேருந்தில் பயணித்தனர். மாவட்டத்தில் 3-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai