Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை.  மாணவர்களுக்கு பாலின வன்கொடுமை விழிப்புணர்வுப் பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.  மாணவர்களுக்கு பாலின வன்கொடுமை விழிப்புணர்வுப் பயிற்சி

    By  சிதம்பரம்  |   Published on : 27th March 2014 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 33 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான பாலிய வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
     பாலின வன்கொடுமைக்கு எதிரான புகார் குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பாலின வன்கொடுமை விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது.
     இப் பயிற்சியில் பல்கலையில் நடக்கும் பாலின வன்கொடுமைகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது, பாலின வன்கொடுமைகளை தடுப்பது, எவ்வாறு புகார் அளிப்பது என்பன குறித்தும் 33 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு துறை வாரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.
     முகாம் நிறைவு விழா பல்கலைக்கழக ஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பேசுகையில், ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேரும்போது இப்பயிற்சி தருவது அவசியமாகும் என்றார். முகாமில் சிறப்பு பயிற்சி அளித்த வல்லுநர்களுக்கு சான்றிதழ்களை ஷிவ்தாஸ்மீனா வழங்கினார்.
     இந்நிகழ்ச்சியில் வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் தலைமை வகித்துப் பேசியதாவது: இத்தகைய விழிப்புணர்வு பயிற்சி முகாம் முதன் முதலில் அண்ணாமலைப் பல்கலை.யில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
     விழாவில் பாலியல் வன்கொடுமை புகார் குழு தலைவி பி.மின்னல்கொடி, உறுப்பினர் முனைவர் எஸ்.பூங்கோதை, முனைவர்கள் ஆறுமுகம் சகிலா, சி.சுப்ரமணியன், சில்வியா சாந்தகுமாரி, எம்.ஜெயக்குமரன், சி.எஸ்.ரத்தினசபாபதி, உதவிப் பதிவாளர் திலகம் ஆகியோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai