Enable Javscript for better performance
அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏன்?  இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏன்?  இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி விளக்கம்

    By  கடலூர்,  |   Published on : 27th March 2014 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி அமையாத தற்கு பன்னாட்டு, உள்நாட்டு தொழிலதிபர்கள்தான் காரணம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்தரசன்.
     கடலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கு.பாலசுப்ரமணியனை ஆதரித்து கடலூரில் அண்மையில் நடைபெற்ற இடதுசாரி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது: நம் நாட்டிற்குத் தேவையான மாற்றுக் கொள்கை, மாற்றுத் திட்டங்களை முன்வைத்து மாற்று ஆட்சியை ஏற்படுத்த மிகப்பெரிய அரசியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்
     கை கோர்த்து ஒன்றுபட்டு களத்தில் நிற்கின்றன.
     முதல்வர் ஜெயலலிதா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில் பரதன், சுதாகர், பிரகாஷ்காரத் ஆகியோர் அவரை நேரில் சந்தித்தனர். அப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்றார். தேர்தல் அறிக்கை அறிவிப்பின் போதும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றார். இந்நிலையில் முதல்வர் உங்களுக்கு ஒரு தொகுதி மட்டும் தான் ஒதுக்கியிருப்பதாக அதிமுகவின் நால்வர் அணி கூறியபோது ஏற்கெனவே போட்டியிட்ட தலா 3 தொகுதிகளை கேட்டோம். இவ்வாறு 6 நாள்களாக தொடர்ந்து இதே பதிலைத்தான் சொன்னார்கள்.
     கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு அவர்கள் திட்டமிட்டு விலகியுள்ளனர். ஜெயலலிதாவை, கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பிரிக்க பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு முதலாளிகளும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்றார் முத்தரசன்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai