Enable Javscript for better performance
ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்:  இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்:  இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு

    By  சிதம்பரம்,  |   Published on : 27th March 2014 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலரைத் தாக்கியதாக இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மீது கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரைச் சேர்ந்த முன்னாள் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த். இவர் புதன்கிழமை காலை சி.முட்லூரிலிருந்து வயலுக்கு பைக்கில் செல்போன் பேசிக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
     அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற அரசு கலைக் கல்லூரி மாணவி மீது மோதியதாகத் தெரிகிறது. அப்போது அவ்வழியே வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் படையில் பணியாற்றும் ஆயுதப்படைக் காவலர் நடராஜன் (31), ரஜினிகாந்த் மற்றும் அவருடன் வந்தகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவலர் நடராஜனை, மூவரும் தகாத வார்த்தையால் திட்டி தகராறு ஏற்பட்டதில் காவலர் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது.
     இதுகுறித்து சிதம்பரம் கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நடராஜன், கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
     புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் ரஜினிகாந்த் மற்றும் 2 பேர் மீது போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai