Enable Javscript for better performance
\\\"என்எல்சி தொழிலாளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்\\\' - Dinamani

சுடச்சுட

    

    "என்எல்சி தொழிலாளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்'

    By  கடலூர்,  |   Published on : 27th March 2014 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து என்எல்சி தொழிலாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன்.
     கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த இரு தினங்களாக எ.அருண்மொழித்தேவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
     இந்நிகழ்ச்சியில் எ.அருண்மொழித்தேவன் பேசியதாவது: என்எல்சி பங்கு விற்பனையை தனியாருக்கு விற்பதை தடுத்து, தமிழக பொதுத்துறை நிறுவனங்களே வாங்கச் செய்து, என்எல்சி தொழிலாளர்களின் நலனை முதல்வர் காப்பாற்றியுள்ளார். எனவே அவருக்கு என்எல்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
     இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி தொகுதி எம்எல்ஏ எம்.பி.எஸ். சிவசுப்ரமணியன், நெய்வேலி நகர அதிமுக செயலர் கோவிந்தராஜ், அவைத் தலைவர் வெற்றிவேல், தொழிற் சங்க செயலர் ரா.உதயக்குமார், மாவட்ட மாணவரணி செயலர் கே.மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai