Enable Javscript for better performance
கம்யூனிஸ்ட் வேட்பாளர்  அறிமுகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கம்யூனிஸ்ட் வேட்பாளர்  அறிமுகக் கூட்டம்

    By  விருத்தாசலம்,  |   Published on : 27th March 2014 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கு.பாலசுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
     இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் 29-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, வருகின்ற 31-ம் தேதி திட்டக்குடியிலிருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
     இக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சியின் வட்டச் செயலர் கந்தசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். வேட்பாளர் கு.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் அசோகன், கோகுலகிறிஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai