Enable Javscript for better performance
கருவூலங்களில்  ஓய்வூதியர் நேர்காணல்  ஏப்ரல் 1-ல் தொடக்கம் - Dinamani

சுடச்சுட

    

    கருவூலங்களில்  ஓய்வூதியர் நேர்காணல்  ஏப்ரல் 1-ல் தொடக்கம்

    By  கடலூர்,  |   Published on : 27th March 2014 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நேர்காணல் வரும் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடக்கிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், 2014-2015ஆம் ஆண்டிற்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதிவரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல்
     2 மணி வரை நடைபெறும்.
     இந்த நேர்காணலின் போது ஓய்வூதியர்கள், தங்களது ஓய்வூதியப் புத்தகத்தை கொண்டு வர வேண்டும். முகவரி மாற்றம் இருப்பின் நேர்காணலில் தகவல் தெரிவிக்க வேண்டும். வருமான வரி வரம்பில் வருபவர்கள் தங்களது பான்கார்டு நகலை வழங்க வேண்டும்.
     நேர்காணலின் போது ஓய்வூதியர்களின் புகைப்படம் மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளதால், அமைதிகாத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
     ஜூன் 30-ஆம் தேதிக்குள் நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai