Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் கல்லூரி விடுதி மாணவர்கள் உணவு சரியில்லை எனக்கூறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான நல விடுதியில் 139-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
     இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை எனக்கூறி கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தினர். இதில், இனி தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai