Enable Javscript for better performance
கொளஞ்சியப்பர் கோவிலில்  உண்டியல் வரவு ரூ. 11 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    கொளஞ்சியப்பர் கோவிலில்  உண்டியல் வரவு ரூ. 11 லட்சம்

    By  விருத்தாசலம்,  |   Published on : 27th March 2014 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ.11,42,162 செலுத்தப்பட்டிருந்தது.
     கொளஞ்சியப்பர் கோவிலில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, நிர்வாக அலுவலர் கொளஞ்சி, பழமலைநாதர் கோவில் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், ஆய்வாளர் சிவஞானம், மேலாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள 8 உண்டியல் திறக்கப்பட்டது. இப்பணிக்கு பக்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
     இதில் 30 கிராம் தங்கம், 925 கிராம் வெள்ளி, ரூ.10,74,825 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தாற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் ரூ.67,337 காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. மொத்த உண்டியல் காணிக்கை ரூ.11,42,162 ஆகும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai