Enable Javscript for better performance
சிதம்பரம் அருகே பஸ்- கார் மோதல்: பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் புதன்கிழமை உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
     ÷பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரைச் சேர்ந்தவர் ஷாகீர் (55). இவர் குடும்பத்துடன் காரில் புதுச்சேரி நோக்கி புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம், சி.முட்லூர் புறவழிச்சாலை தீர்த்தாம்பாளையம், வெள்ளாற்றுப் பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பினார். அப்போது எதிரே கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பஸ் மீது கார் மோதியது.
     இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஷாகீரின் மனைவி ஷைலா (50) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அசாருதீன் (21), ஷாகீர், முகமதுயாகூப் (64), இவரது மனைவி ஜெகதார்நாச்சியார் (55) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரங்கிப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai