Enable Javscript for better performance
சிதம்பரம் அருகே பிடிபட்ட  மண்ணுளிப் பாம்பு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மூன்றரை அடி நீள மண்ணுளிப் பாம்பினை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
     சிதம்பரம் அருகே ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மண்ணுளிப் பாம்பு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாக வனத்துறையினருக்கு, ஒரத்தூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
     தகவல்யறிந்த வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மூன்றரை அடி நீளமும், 3 கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பை பிடித்து, அருகாமையில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai