Enable Javscript for better performance
திமுகவினர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் புதன்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
     கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன் விருத்தாசலத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
     இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலர் தண்டபாணி, ஒன்றியப் பொறுப்பாளர் சிவக்கொழுந்து, தி.க. மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாநில மாணவரணி இணைச் செயலர் இளந்திரையன், விடுதலைச் சிறுத்தைக் கட்சி மாவட்டப் பொருளாளர் கலைமுகிலன், நகர அமைப்பாளர் மருதையன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் சுக்கூர், திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் விருத்தாசலத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
     விருத்தாசலம் வானொலித் திடலில் தொடங்கிய பிரசாரப் பயணத்தில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai