Enable Javscript for better performance
தேர்தல் செலவை கண்காணிக்க  3 பார்வையாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் செலவினங்களை கண்காணிக்க, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரிகளான, தேர்தல் செலவின பார்வையாளர்கள் 3 பேர் கடலூர் மாவட்டத்தில் பணியை வரும் 28- ஆம் தேதி தொடங்குகின்றனர்.
     இது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தேர்தல் செலவின பார்வையாளர்களில் ஒருவரான ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த விநாயக்பட். இவர் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளை கவனிப்பார். கடலூரில் தங்கியிருப்பார்.
     உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாயங்பிஸ்ட். இவர் திட்டக்கடி, விருத்தாச்சலம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகளை கவனிப்பார், நெய்வேலியில் தங்கியிருப்பார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கே.ஆர்.அபிஷேக் ஆனந்தராவ். இவர் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிகளை கவனிப்பார், சிதம்பரத்தில் தங்கியிருப்பார்.
     மூன்று தேர்தல் செலவின பார்வையாளர்களும் வரும் 28- ஆம் தேதி முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பணிகள் மேற்கொள்வார்கள் என செய்திக் குறிப்பில்
     தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai